‘7.5% உள் ஒதுக்கீடு: 405 மாணவர்களுக்கு மருத்துவ சீட்’ – வெளியானது தரவரிசை பட்டியல்!

‘7.5% உள் ஒதுக்கீடு: 405 மாணவர்களுக்கு மருத்துவ சீட்’ – வெளியானது தரவரிசை பட்டியல்!

மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

தமிழக அரசு கொண்டு வந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5% உள் ஒதுக்கீடு சட்டம் நடப்பாண்டு அமல்படுத்தப்பட உள்ளது. முதன்முறையாக மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட உள்ள நிலையில், மாணவர்களை தேர்தெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன் படி, தற்போது சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவ படிப்புக்கு தேர்தெடுக்கப்பட்ட மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

‘7.5% உள் ஒதுக்கீடு: 405 மாணவர்களுக்கு மருத்துவ சீட்’ – வெளியானது தரவரிசை பட்டியல்!

மருத்துவ தரவரிசை பட்டியலில், 710 மதிப்பெண்களுடன் ஈரோடு பள்ளி மாணவர் ஸ்ரீஜன் முதலிடமும், 705 மதிப்பெண்களுடன் நாமக்கல் மோகனபிரபா 2வது இடமும், 701 மதிப்பெண்களுடன் சென்னை ஸ்வேதா 3ம் இடமும் விருதுநகர் யாழினி 695 மதிப்பெண்களுடன் 4ம் இடமும், தருமபுரி அரவிந்த் 691 மதிப்பெண்களுடன் 5ம் இடமும் பிடித்துள்ளனர். மேலும், உள்ஒதுக்கீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் தனியாக வெளியிடப்பட்டது.

‘7.5% உள் ஒதுக்கீடு: 405 மாணவர்களுக்கு மருத்துவ சீட்’ – வெளியானது தரவரிசை பட்டியல்!

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு கொண்டு வந்த 7,5% உள் ஒதுக்கீடு சட்டத்தின் மூலமாக 405 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைக்கும் என்றும் நவ.18ம் தேதி மருத்துவ கலந்தாய்வு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.