மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!

 

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டுடன், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது.

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!

முதன்முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீட்டுடன், நடப்பாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் தரவரிசை பட்டியலை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கலந்தாய்வு 18ம் தேதி தொடங்கும் என்றும் அவர் அன்று அறிவித்தார். அதன் படி, கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் கலந்தாய்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!

இந்த நிலையில், இன்று முதல் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. கொரோனாவால் மாணவர்களுக்கும் அலுவலருக்கும் இடையே கண்ணாடித் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக பொதுப்பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு நடக்கிறது. தற்போது நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டின் கீழ், இன்று பிற்பகல் 45 மாணவர்களுக்கு முதல்வர் அனுமதி ஆணையை வழங்க உள்ளதாக தெரிகிறது.