புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம் கொடுங்க.. மத்திய, மாநில அரசுகளிடம் மாயாவதி வேண்டுகோள்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம் கொடுங்க.. மத்திய, மாநில அரசுகளிடம் மாயாவதி வேண்டுகோள்

சொந்த ஊருக்கு திரும்ப திட்டமிட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துக்கான ஏற்பாடுகளை செய்யும்படி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவியுமான மாயாவதி, பி.ஆர்.அம்பேத்கர் 130வது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் சொந்த ஊருக்கு திரும்ப புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம் கொடுங்க.. மத்திய, மாநில அரசுகளிடம் மாயாவதி வேண்டுகோள்
சொந்த ஊருக்கு திரும்பி செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (கோப்புப்படம்)

கடந்த ஆண்டு கொரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காலத்தில் நகரங்களிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேறியதுபோல் மீண்டும் நிகழாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். புலம்பெயர்ந் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துக்கு போதுமான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம் கொடுங்க.. மத்திய, மாநில அரசுகளிடம் மாயாவதி வேண்டுகோள்
கொரோனா தடுப்பூசி

இல்லையெனில், இந்த மக்கள் வெளியேறும்போது, கோவிட்-19ன் பிடியில் வரக்கூடும். இதனை தடுக்க மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உதவ வேண்டும். பாபாசாகேப்பின் பிறந்தநாளான இன்று (நேற்று) நாட்டில் உள்ள ஏழைகள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு இலவச தடுப்பூசி போடுவதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.