காவலர் தேர்வை ஆன்லைனில் நடத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் திட்டம்

 

காவலர் தேர்வை ஆன்லைனில் நடத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் திட்டம்

தனியார் உதவியுடன் காவலர் தேர்வை ஆன்லைனில் நடத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. பொறியியல், தொழில்கல்வி உள்ளிட்ட அனைத்து பட்டப்படிப்புகளின் இறுதித் தேர்வை ரத்து செய்துள்ளன.

காவலர் தேர்வை ஆன்லைனில் நடத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் திட்டம்
இந்நிலையில் தனியார் உதவியுடன் காவலர் தேர்வை ஆன்லைனில் நடத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் திட்டமிட்டுள்ளது. அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை ஆணையர்கள், காவலர்களிடம் இதுகுறித்து கருத்துக் கேட்கப்பட்டுவருகிறது என்றும், கிரேடு-2 காவலர், கிரேடு-2 சிறை வார்டன், உதவி ஆய்வாளர் தேர்வுகளை நடத்த ஆலோசனை செய்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலா 50 காவலர்களிடன் கருத்து கேட்டு 31ஆம் தேதிக்குள் பதில் அனுப்புமாறு மாவட்ட எஸ்.பி.களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.