‘மாஸ்டர் டிக்கெட் முன்பதிவு’: கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்ட விஜய் ரசிகர்கள்!

‘மாஸ்டர் டிக்கெட் முன்பதிவு’: கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்ட விஜய் ரசிகர்கள்!

கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாமல் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் டிக்கெட் முன்பதிவுக்கு குவிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘மாஸ்டர் டிக்கெட் முன்பதிவு’: கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்ட விஜய் ரசிகர்கள்!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இதில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் , சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் இப்படத்தில் கல்லூரி பேராசிரியராக வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இந்தத் திரைப்படத்தின் டீஸரானது கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி வெளியான நிலையில் சமீபத்தில் படத்தின் ப்ரோமா காட்சிகளும் படக்குழுவால் வெளியிடப்பட்டது.

‘மாஸ்டர் டிக்கெட் முன்பதிவு’: கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்ட விஜய் ரசிகர்கள்!

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வமாக உள்ளனர். சென்னை ரோகிணி தியேட்டரில் மாஸ்டர்படத்தின் டிக்கெட் முன்பதிவாக ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர். கொரோனா காலகட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி மாஸ்க் அணிய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில் விஜய் ரசிகர்களின் இந்த செயல் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

‘மாஸ்டர் டிக்கெட் முன்பதிவு’: கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்ட விஜய் ரசிகர்கள்!

கிட்டத்தட்ட 9 மாத காலமாக கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் அரசு மற்றும் முன்கள பணியாளர்கள் என பலரும் தங்கள் உயிரை பணயம் வைத்து பணிசெய்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த சூழலில் கொரோனா நெறிமுறைகளை காற்றில் பறக்கவிடும் படியாக மாஸ்க், சமூக இடைவெளி இன்றி ரசிகர்கள் கூடியிருப்பது அச்சத்தை உண்டாக்கியுள்ளது.