மாஸ்டர் படக்காட்சிகள் லீக் : ரூ.25 கோடி கேட்டு தயாரிப்பாளர் நோட்டீஸ்!

 

மாஸ்டர் படக்காட்சிகள் லீக் : ரூ.25 கோடி கேட்டு தயாரிப்பாளர் நோட்டீஸ்!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படக்காட்சிகள் லீக் ஆனதால் ரூ.25 கோடி கேட்டு தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மாஸ்டர் படக்காட்சிகள் லீக் : ரூ.25 கோடி கேட்டு தயாரிப்பாளர் நோட்டீஸ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இதில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை மாளவிகா மோகனன், நடிகர் சாந்தனு, நடிகர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக பட வெளியீடு தள்ளிப்போனது. பின்னர் பல்வேறு இழுபறிக்கு மத்தியில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13 ஆம் தேதி திரைப்படம் வெளியானது. இருப்பினும் மாஸ்டர் படம் வெளிவரும் முன்னரே படத்தின் சுமார் ஒரு மணிநேர காட்சிகள் இணையத்தில் வெளியானது. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்து. இதையடுத்து தயாரிப்பாளர் லலித்குமார், லீக் ஆன மாஸ்டர் பட காட்சிகளை யாரும் பகிரவேண்டாம் என கோரிக்கை வைத்தார். விஜய்யின் மாஸ்டர் பட காட்சிகளை இணையதளத்தில் லீக் செய்தது சோனி டிஜிட்டல் சினிமாஸ் நிறுவன ஊழியர் என கண்டுபிடிக்கப்பட்டது.

மாஸ்டர் படக்காட்சிகள் லீக் : ரூ.25 கோடி கேட்டு தயாரிப்பாளர் நோட்டீஸ்!

இந்நிலையில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படக்கட்சிகள் லீக்கானது தொடர்பாக ரூ.25 கோடி கேட்டு தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஜனவரி 13 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் முன்பே காட்சிகள் லீக் ஆனதால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் தயாரிப்பாளர் லலித் குமார். ஊழியர் மூலம் படக்காட்சி லீக்கானதால் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.