மாஸ்டர் முதல் காட்சி டிக்கெட் விலை ரூ.1000?!

 

மாஸ்டர் முதல் காட்சி டிக்கெட் விலை ரூ.1000?!

மாஸ்டர் படத்தின் முதல் காட்சி டிக்கெட் விலை ரூ.1000க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் முதல் காட்சி டிக்கெட் விலை ரூ.1000?!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகின. இப்படம் வெளிவரும் முன்னரே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மாஸ்டர் முதல் காட்சி டிக்கெட் விலை ரூ.1000?!

மாஸ்டர் திரைப்பட பணிகள் முடிந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. மாஸ்டர் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. அத்துடன் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு நேரில் சென்று டிக்கெட் வாங்க முண்டியடித்தனர்.

மாஸ்டர் முதல் காட்சி டிக்கெட் விலை ரூ.1000?!

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் விஜய்யின் மாஸ்டர் படத்தின் முதல் காட்சி டிக்கெட் விலை ரூ.1000க்கு விற்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. முதல் காட்சிக்கு ரூ.1000, பிற காட்சிகளுக்கு ரூ. 300 கட்டணம் வசூலிக்கப்படுவதாக தியேட்டர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.