’100 நாட்களுக்கு மாஸ்க் அவசியம்’ கட்டளை இடப்போவது யார் தெரியுமா?

 

’100 நாட்களுக்கு மாஸ்க் அவசியம்’ கட்டளை இடப்போவது யார் தெரியுமா?

கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய நோயாளிகள் அதிகரிப்பதும், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை உயர்ந்துவருவது ஆபத்தான நிலையைக் காட்டுகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 62 லட்சத்து 30 ஆயிரத்து 912 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 58 லட்சத்து 12 ஆயிரத்து 406 நபர்கள்.

’100 நாட்களுக்கு மாஸ்க் அவசியம்’ கட்டளை இடப்போவது யார் தெரியுமா?

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 15 லட்சத்து 24 ஆயிரத்து 457 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,88,94,049 பேர். சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2 கோடியை நெருங்குகிறது.

கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் கடைப்பிடிக்கச் சொல்லும் பாதுகாப்பு நடைமுறைகளில் மாஸ்க் அணிவது முதன்மையானது. மேலும் தனிமனித இடைவெளி, கைகளைச் சுத்தமாக வைத்துகொள்ளுதல் உட்பட சில விஷயங்கள் அடிப்படை.

’100 நாட்களுக்கு மாஸ்க் அவசியம்’ கட்டளை இடப்போவது யார் தெரியுமா?
joe biden

இவற்றில் மாஸ்க் அணிவதை 100 நாட்கள் அவசியம் என வலியுறுத்தியுள்ளார் அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பைடன். நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் நடந்த தேர்தலில் வென்று அடுத்த அதிபராகிறார் ஜோ பைடன். அவர் ஜனவரிமாத இறுதியில் பதவியேற்க உள்ளார். ஆனால், அதற்கு முன்பே மாஸ்க் அணிவதை 100 நாட்களுக்குக் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். மேலும், தான் அதிபரானதும் இது கட்டாய நடைமுறையில் இருக்கும் என்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக உள்ள நாடு அமெரிக்கா. தற்போதைய நிலவரப்படி, 1,47,72,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 86,58,882 பேர் குணமாகிவிட்டனர். 2,85,550 பேர் இறந்துவிட்டனர்.