திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டோம் – கே.பாலகிருஷ்ணன்

 

திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டோம் – கே.பாலகிருஷ்ணன்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக தன்னுடன் கூட்டணி அமைக்கும் காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்திவிட்டது. இன்று மாலை காங்கிரசுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது.

திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டோம் – கே.பாலகிருஷ்ணன்

இதைத்தொடர்ந்து, இன்று காலை திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையின் போது அதிருப்தி அடைந்த மார்க்சிஸ்ட் நிர்வாகிகள், செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்காமலேயே சென்று விட்டனர். 12 தொகுதிகளை கேட்ட மார்க்சிஸ்ட் கட்சிக்கு, திமுக 6 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முன்வந்ததால் நிர்வாகிகள் அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளியாகின.

திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டோம் – கே.பாலகிருஷ்ணன்

இதையடுத்து, சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சி நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தினர். அதில், கேட்ட தொகுதிகளை திமுக வழங்காதது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும், இன்று காலை நடந்த பேச்சுவார்த்தையின் போது கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டதை விட கூடுதல் தொகுதிகளை கேட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.