‘திமுக சொல்லாததை’.. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட கூட்டணி கட்சி!

 

‘திமுக சொல்லாததை’.. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட கூட்டணி கட்சி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கான பிரச்சாரங்களில் அதிமுக, திமுக ஆகிய மாபெரும் கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்துக்கு முன்னர், அக்கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெளியானது. முதலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக ஆவின் பால் விலை குறைப்பு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை, கல்விக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட அசத்தலான திட்டங்களை அறிவித்தது.

‘திமுக சொல்லாததை’.. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட கூட்டணி கட்சி!

இலவசங்கள் இல்லாத திமுகவின் தேர்தல் அறிக்கை பிற அரசியல் கட்சிகளை திரும்பிப் பார்க்க வைத்தது. அன்றைய தினத்தின் கதாநாயகனாகவே திமுகவின் தேர்தல் அறிக்கை பார்க்கப்பட்டது. எனினும் அதில் ஒரு சில திட்டங்கள் இடம்பெறவில்லை. விடுபட்ட சில வாக்குறுதிகளை இணைத்து தேர்தல் அறிக்கையில் திருத்தம் மேற்கொண்ட போதும், ‘மது விலக்கை’ திமுக மறந்து விட்டது.

‘திமுக சொல்லாததை’.. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட கூட்டணி கட்சி!

இந்த நிலையில், திமுக கொடுக்காத ‘மது விலக்கு’ வாக்குறுதியை அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில், ‘தமிழகத்தில் மதுவிலக்கு அவசியம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கையை நாங்கள் வெளிப்படுத்தி இருக்கிறோம் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்திருக்கிறார்.