தொகுதி பங்கீடு : திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி!

 

தொகுதி பங்கீடு : திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி!

திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் மதிமுக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டது. அந்த கட்சிகளுக்கு திமுக எத்தனை தொகுதிகளை வழங்கியிருக்கிறது என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 இடங்களும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் திமுக ஒதுக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

தொகுதி பங்கீடு : திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி!

இதைத் தொடர்ந்து, இன்று மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். திமுக தரப்பில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமை தாங்க, மார்க்சிஸ்ட் சார்பில் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துரையாடினர்.

தொகுதி பங்கீடு : திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி!

பேச்சுவார்த்தை முடிந்த பிறகு வெளியே வந்த மார்க்சிஸ்ட் கட்சியினர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்காமலேயே அங்கிருந்து சென்று விட்டனர். பேச்சுவார்த்தையின் போது மார்க்சிஸ்ட் 12 தொகுதிகளை கேட்டதாகவும் திமுக 6 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முன்வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், திமுக மீது அதிருப்தியடைந்த மார்க்சிஸ்ட் கட்சியினர் அண்ணா அறிவாலயத்தில் சென்று விட்டார்களாம்.