வேளாண் சட்டங்களை கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 

வேளாண் சட்டங்களை கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தஞ்சை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களை கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்ட தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் ஏராளமனோர் கலந்துகொண்டனர். அப்போது, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவும் வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைதுசெய்தனர்.

வேளாண் சட்டங்களை கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இதேகோரிக்கையை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட பிஎஸ்என்எல் அலுவலகத்தை, முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்ய முயன்றபோது, அவர்கள் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.