கடலூர்:6 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சந்தை- கத்தரிக்காய் விற்ற விவசாய பட்டதாரி!

 

கடலூர்:6 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சந்தை- கத்தரிக்காய் விற்ற விவசாய பட்டதாரி!

காட்டுமன்னார்கோவில் அருகே 6 மாதங்களுக்கு பிறகு வார சந்தை திறக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே செயல்பட்டு வரும் வார சந்தை வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறுவது வழக்கம்,
இந்த சந்தை க்கு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம்.
கொரோனா ஊரடங் கு காரணமாக, கடந்த மார்ச் 25ந் தேதி முதல் வார சந்தை செயல்படவில்லை. இந்த நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு சந்தை மீண்டும் இன்று முதல் தொடங்கி உள்ளது.

கடலூர்:6 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சந்தை- கத்தரிக்காய் விற்ற விவசாய பட்டதாரி!

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து, தற்போது மீண்டு வந்து தனது சொந்த உற்பத்தியில் கத்தரிக்காய் வியாபாரம் செய்கிறார் மணிகண்டன் என்கிற விவசாய பட்டதாரி.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த ஆறு மாதங்களாக கொரனோ ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வாரசந்தை தொடங்கப்பட்டதாக அறிந்து உடனடியாக நானும் எனது வீட்டில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறேன். பொதுமக்கள் குறைவாக உள்ளதால் இன்று மந்தமாக நிலையில் உள்ளது என தெரிவித்தார்.