விருதுகள் பெறுவது இலக்கு அல்ல.. பல யோகநாதன்களை உருவாக்குவதுதான் கனவு.. கோவை மர மனிதன்

 

விருதுகள் பெறுவது இலக்கு அல்ல.. பல யோகநாதன்களை உருவாக்குவதுதான் கனவு.. கோவை மர மனிதன்

நாடு முழுவதும் பல யோகநாதன்களை உருவாக்குவதே எனது கனவு என்று 4 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ள யோகநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றும், கோவையின் மர மனிதன் என்று செல்லமாக அழைக்கப்படும் மாரிமுத்து யோகநாதன் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமாக மரக்கன்றுகளை நட்டு உள்ளார். யோகநாதன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: விருதுகள் பெறுவது எனது கனவோ அல்லது இலக்கோ கிடையாது. நாடு முழுவதும் பல யோகநாதன்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. சுற்றுப்புறச்சூழல் நோக்கிய எனது பயணத்தில் பல கஷ்டங்களை எதிர்கொண்டேன்.

விருதுகள் பெறுவது இலக்கு அல்ல.. பல யோகநாதன்களை உருவாக்குவதுதான் கனவு.. கோவை மர மனிதன்
மரியமுத்து யோகநாதன்

எனது சம்பளத்தில் 40 சதவீதத்தை விதைகள் மற்றும் மரக்கன்றுகளை வாங்குவதற்காக செலவிடுகிறேன். எனது பணியை (மரக்கன்று நடுதல்) பார்த்து அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவர் நன்கொடையாக கொடுத்த நிலத்தில் மரக்கன்றுகளை நடுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் பத்ம ஸ்ரீ விருதுக்காக என்னிடம் அதிகாரிகள் விசாரித்தார்கள். ஆனால் என் பெயர் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை? இருப்பினும் எந்த விருதையும் பெறுவது எனது நோக்கம் அல்ல. நான் விருதுகள் பெற்றால், நாடு முழுவதும் மர கன்றுகள் நட மக்கள் அதிகளவில் என்னை அழைப்பார்கள்.

விருதுகள் பெறுவது இலக்கு அல்ல.. பல யோகநாதன்களை உருவாக்குவதுதான் கனவு.. கோவை மர மனிதன்
மரக்கன்றுகள்

இந்திய அரசாங்கத்தால் சுற்றுச்சூழல் வாரியர் விருது பெற்றது குறித்து பேசுகையில் செலவை கருத்தில் கொண்டு விருதை தபாலில் அனுப்பும்படி நான் கோரியிருந்தேன். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் துணை ஜனாதிபதி கைகளில் விருது வாங்கியது மகிழ்ச்சி. இந்த உன்னதமான காரணத்துக்காக நான் பணியாற்றி வருகின்ற போதிலும போக்குவரத்து அதிகாரிகளிடமிருந்து பல இடமாற்றங்களை நான் எதிர்கொண்டேன். இப்போது ஒவ்வொரு வீட்டிலும் 5 மரங்களை (பழம் தரும் மரங்கள்) வளர்ப்பது. ஆனால் இதுவரை மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.