தமிழக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மன்சூர் அலி கான்… ஏன் இப்படி ஒரு ‘ஷாக்’ முடிவு?

தமிழக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மன்சூர் அலி கான்… ஏன் இப்படி ஒரு ‘ஷாக்’ முடிவு?

கடந்த மக்களவை தேர்தலில் நாம் தமிழர் சார்பில் போட்டியிட்டு வேற லெவலில் பிரச்சாரம் செய்து மக்களின் கவனம் பெற்றவர் நடிகர் மன்சூர் அலி கான். மக்களின் இதயங்களில் இடம்பிடிக்க முடிந்த அவரால் ஏனோ அவர்களின் வாக்களிக்கும் விரலில் இடம்பிடிக்க முடியவில்லை. கட்சிக்குள் யார் செய்த சதியோ தெரியவில்லை சட்டப்பேரவை தேர்தலுக்கு சீமான் அவருக்கு சீட்டு கொடுக்கவில்லை.

தமிழக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மன்சூர் அலி கான்… ஏன் இப்படி ஒரு ‘ஷாக்’ முடிவு?

இதனால் விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற மன்சூர் அலி கான், நாம் தமிழர் எனும் பேரியக்கத்தையும் பேராற்றல் கொண்ட சீமானையும் விட்டுப் பிரிந்து புதிய கட்சியைக் கடந்த மாதம் துவக்கினார். தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற பெயரையும் சூட்டினார். இதனால் அவரது மனதில் ஏற்பட்ட காயம் சிறிதளவு ஆறியது என்றே சொல்லலாம். தற்போது அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

தமிழக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மன்சூர் அலி கான்… ஏன் இப்படி ஒரு ‘ஷாக்’ முடிவு?

இத்தகைய பரபரப்பான சூழலில் மன்சூர் அலி கான் யாருடன் சேர்வார், புதிய கூட்டணியை உருவாக்குவாரா என்ற கேள்விகள் மக்களிடையே தொற்றிக் கொண்டன. ஆனால் அவர் ஒரெயொரு அறிவிப்பால் ஏமாற்றிவிட்டார். இல்லை தேர்தல் ஆணையம் ஏமாற்றிவிட்டது. சட்டப்பேரவை தேர்தலில் தமிழ் தேசிய புலிகள் கட்சி போட்டியிடவில்லை என மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மன்சூர் அலி கான்… ஏன் இப்படி ஒரு ‘ஷாக்’ முடிவு?

தேர்தல் ஆணையத்தில் தமிழ் தேசிய புலிகள் கட்சியைப் பதிவு செய்ய முடியாததால் போட்டியிட முடியவில்லை என்று கூறியிருக்கிறார். சதிக்கு மேல் சதி நடந்து ஒரு நல்ல தலைவர் தேர்தலில் போட்டியிட முடியவில்லையே என அவரது ஆதரவாளர்களும் மக்களும் வருத்தம் கொண்டிருக்கின்றனர். தேர்தல் ஆணையம் ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கையும் விடுத்திருக்கின்றனர்.