சச்சினை விமர்சித்த பிரபல கிரிக்கெட் வீரர் மம்தா கட்சியில் இணைந்தார்!

 

சச்சினை விமர்சித்த பிரபல கிரிக்கெட் வீரர் மம்தா கட்சியில் இணைந்தார்!

மனோஜ் திவாரி இந்திய கிரிக்கெட் வீரர் என்பதைக் காட்டிலும் பெரிதாக முதல் தர போட்டிகளிலேயே விளையாடியவர். அவ்வப்போது ஐபிஎல்லிலும் தலைகாட்டுவார். இந்திய அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் அடித்திருந்தாலும் பெரிதாக இவரை பிசிசிஐ கண்டுகொள்ளவில்லை. இவருக்கு வயது 35 ஆகிறது. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்.

சச்சினை விமர்சித்த பிரபல கிரிக்கெட் வீரர் மம்தா கட்சியில் இணைந்தார்!

கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவ்வப்போது பாஜக அரசை மறைமுகமாகத் தாக்கி ட்வீட் செய்திருக்கிறார். பெட்ரோல், டீசல் உயர்வை கிரிக்கெட்டோடு ஒப்பிட்டு விமர்சனம் செய்திருந்தது செம வைரலானது.

சமீபத்தில் கூட பாடகி ரிஹானாவை எதிர்த்து ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்களைக் கடுமையாக விமர்சித்திருந்தார். மத்திய அரசின் பொம்மலாட்ட பொம்மைகள் என்று சுட்டிக்காட்டியிருந்தார். இதுபோல தொடர்ந்து பாஜகவை விமர்சித்துவந்தார்.

இச்சூழலில் இன்று மம்தா பானர்ஜி முன்னிலையில் திருணாமுல் கட்சியில் இணைந்தார். இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர் தனக்கு வாழ்வின் புதிய பயணம் தொடங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேற்குவங்கத்தில் மம்தா தலைமையிலான ஆட்சி முடிவடையவிருப்பதால் அங்கு தேர்தல் நடத்தப்படுகிறது. எதிர்வரும் தேர்தலை முன்னிறுத்தி பல்வேறு பிரபலங்களும் வெவ்வேறு கட்சிகளில் இணைந்துவருகின்றனர்.