மம்தாவுக்கு மனோஜ் திவாரி… பா.ஜ.க.வுக்கு சவுரவ் கங்குலியா?

 

மம்தாவுக்கு மனோஜ் திவாரி… பா.ஜ.க.வுக்கு சவுரவ் கங்குலியா?

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி கட்சியில் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி இணைந்ததையடுத்து, சவுரவ் கங்குலியை பா.ஜ.க.வில் இணைக்க முயற்சி மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. மிகவும் தீவிரமாக உள்ளது. அதற்காக பல அதிரடி நடவடிக்கைகளை அந்த கட்சி மேற்கொண்டு வருகிறது. எதற்கும் அசராத திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியே பா.ஜ.க.வின் அசுர வளர்ச்சி கண்டு கொஞ்சம் ஜெர்க்காகி உள்ளார். மேற்கு வங்கத்தில் சவுரவ் கங்குலியை பா.ஜ.க. களமிறக்கும் என்று நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது.

மம்தாவுக்கு மனோஜ் திவாரி… பா.ஜ.க.வுக்கு சவுரவ் கங்குலியா?
பா.ஜ.க.

மேற்கு வங்கத்தில் இளைஞர்கள் மத்தியில் சவுரவ் கங்குலிக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. கங்குலியை தன் பக்கம் இழுத்து விட்டால் கணிசமான வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என்று பா.ஜ.க. கணக்கு போடுகிறது. ஆனால் சவுரவ் கங்குலி அரசியலுக்கு வருவது மாதிரி தெரியவில்லை.

மம்தாவுக்கு மனோஜ் திவாரி… பா.ஜ.க.வுக்கு சவுரவ் கங்குலியா?
திரிணாமுல் காங்கிரஸ்

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி நேற்று யாரும் எதிர்பாராத வண்ணம் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். இதற்கு பதிலடியாக சவுரவ் கங்குலியை தன் பக்கம் இழுக்க பா.ஜ.க. மீண்டும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.