வேளாண் சட்டங்களில் எந்த தீங்கும் இல்லை.. அமல்படுத்த விவசாயிகள் அனுமதிக்க வேண்டும்.. பா.ஜ.க. முதல்வர்

வேளாண் சட்டங்களில் எந்த தீங்கும் இல்லை.. அமல்படுத்த விவசாயிகள் அனுமதிக்க வேண்டும்.. பா.ஜ.க. முதல்வர்

வேளாண் சட்டங்களில் எந்த தீங்கும் இல்லை அவற்றை நடைமுறைப்படுத்த விவசாயிகள் அனுமதிக்க வேண்டும் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெறக்கோரியும் டெல்லியின் டிக்ரி, சிங்கு காசிப்புர் ஆகிய 3 எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டம் 6 மாதங்களை தாண்டி நடந்து கொண்டு இருக்கிறது. விவசாயிகள் தங்களது போராட்டத்தின் தீவிரத்தை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் பாரத் பந்த், ரயில் மறியல், டிராக்டர் பேரணி என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

வேளாண் சட்டங்களில் எந்த தீங்கும் இல்லை.. அமல்படுத்த விவசாயிகள் அனுமதிக்க வேண்டும்.. பா.ஜ.க. முதல்வர்
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)

ஆனால் மத்திய அரசோ வேளாண் சட்டங்களை திரும்ப பெற மாட்டோம், அதில் திருத்தங்கள் செய்ய தயார் என்று கூறுகிறது. அதேவேளையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே நாங்கள் போராட்டத்தை கை விட்டு விட்டு வீட்டுக்கு திரும்புவோம் என்று விவசாயிகள் போராட்டத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களில் எந்த தீங்கும் இல்லை.. அமல்படுத்த விவசாயிகள் அனுமதிக்க வேண்டும்.. பா.ஜ.க. முதல்வர்
மத்திய அரசு

இந்த சூழ்நிலையில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், 3 வேளாண் சட்டங்களில் எந்த தீங்கும் இல்லை என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். பண்ணை சட்டங்கள் செயல்படுத்தப்படட்டும். அவை பயனளிக்காது எனக் கண்டறியப்பட்டால், அவை குறித்து செயல்பட மத்திய அரசு தயாராக இருக்கும் என தெரிவித்தார்.