பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி… உத்ரகாண்ட் பா.ஜ.க. முதல்வரை விமர்சித்த சிசோடியா

 

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி… உத்ரகாண்ட் பா.ஜ.க. முதல்வரை விமர்சித்த சிசோடியா

உத்ரகாண்ட் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தை ஆம் ஆத்மியின் மனிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாபில் அந்த கட்சிக்கு சில எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கோவாவில் அண்மையில் நடைபெற்ற ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில் ஒரு இடத்தில் வெற்றி பெற்று அந்த மாநிலத்தில் தனது முதல் தேர்தல் வெற்றி கணக்கை தொடங்கியது. தற்போது மற்ற மாநிலங்களிலும் களமிறங்க ஆம் ஆத்மி நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களை ஆம் ஆத்மி இலக்காக வைத்துள்ளது போல் தெரிகிறது.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி… உத்ரகாண்ட் பா.ஜ.க. முதல்வரை விமர்சித்த சிசோடியா
திரிவேந்திர சிங் ராவத்

2021ம் ஆண்டில் நடைபெற இருக்கும் உத்ரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலிலும், 2022ம் ஆண்டில் நடைபெற உள்ள உத்தர பிரதேச தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. அதற்கு முன்னோட்டமாக இப்போதே பா.ஜ.க. அரசுகளை ஆம் ஆத்மி தாக்க தொடங்கி விட்டது. உத்ரகாண்டில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவில்லை என்று முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தை ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி… உத்ரகாண்ட் பா.ஜ.க. முதல்வரை விமர்சித்த சிசோடியா
மனிஷ் சிசோடியா

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: உத்ரகாண்ட் மக்களுக்கு பயனளித்த ஐந்து வளர்ச்சி திட்டங்களை கூற வேண்டும் என்று திரிவேந்திர சிங்ஜிடம் நாங்கள் கேட்டிருந்தோம். அவர் எந்த பதிலும் கொடுக்கவில்லை. மாநிலத்தில் தற்போது உள்ள அரசாங்கம், காங்கிரஸின் அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த முதல்வரால் உருவாக்கப்பட்ட அரசாங்கம், எனவே எந்த வேலையும் (மாநிலத்தில்) செய்யப்படவில்லை என்று உத்ரகாண்ட் மக்கள் கூறுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த தினங்களுக்கு முன், உத்தர பிரதேச குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க முடியவில்லை என்றால் முதல்வர் பதவியிலிருந்து விலகுங்க என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மனிஷ் சிசோடியா விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.