மணிகண்டன் மீது போடப்பட்ட பாலியல் வன்கொடுமை என்ற பிரிவை நீக்க உத்தரவு!

 

மணிகண்டன் மீது போடப்பட்ட பாலியல் வன்கொடுமை என்ற பிரிவை நீக்க உத்தரவு!

நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 ஆண்டுகள் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்ததாகவும், அவரால் 3 முறை கருவுற்று கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அடித்து காயம் ஏற்படுதல், நம்பிக்கை மோசடி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மணிகண்டன் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

மணிகண்டன் மீது போடப்பட்ட பாலியல் வன்கொடுமை என்ற பிரிவை நீக்க உத்தரவு!

இந்நிலையில் இன்று காலை பெங்களூருவில் மணிகண்டனை கைது செய்த தனிப்படை போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மணிகண்டனை போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கில் பாலியல் வன்கொடுமை என்ற அடிப்படையில் எடுத்தகொள்ள முடியாது எனவும், பெண்ணின் விருப்பத்துடன் தான் இருவரும் பழகி உள்ளனர் எனவும் கருத்து தெரிவித்தார். அதனால் அவர் மீது போடப்பட்ட 376 என்ற சட்டப் பிரிவை நீக்க உத்தரவிட்டார். தொடர்ந்து அவரை ஜூலை 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.