பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை!

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைதான 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை நடத்த கோவை மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொள்ளாச்சியில் 200ற்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துவந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் இடம்பெற்றதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தலைதூக்க ஆங்காங்கே போராட்டங்கள் வெடிக்க தொடங்கியதால் பெண்களின் புகார்களின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை!

ஆளும் அதிமுகவை சேர்ந்த பிரமுகர்களுக்கு பொள்ளாச்சி வழக்கில் தொடர்பு உள்ளது. அதனால் முதல்வரின் வசம் ய உள்ள காவல்துறை இந்த வழக்கை விசாரிக்க கூடாது என எதிர்க்கட்சிகளும், மகளிர் அமைப்புகளும்
கண்டன குரல்களை பதிவு செய்தன. இதனால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ வசம் சென்றது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை!

இந்த விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேலும் மூன்று பெண்களின் புகாரின் அடிப்படையில் முன்னாள் அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், ஹேரன் பால், மைக் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை!

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைதான 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை நடத்த கோவை மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல் கைதான மூவருக்கும் நீதிமன்ற காவல் பிப்.3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம் உள்பட 3 பேரும் காணொலியில் ஆஜரான நிலையில் கோவை மகளிர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.