கோடையை சமாளிக்க குளுகுளுன்னு மேங்கோ குல்ஃபி ரெசிபி!

 

கோடையை சமாளிக்க குளுகுளுன்னு மேங்கோ குல்ஃபி ரெசிபி!

கோடைகாலம் ஆரம்பிச்சாச்சு… ஏற்கனவே லாக்கடவுன்ல சிக்கி சின்னாபின்னாமா ஆகி அடுத்து என்ன பண்ணலாம் அப்டினு யோசிக்கிறதுக்கு முன்னாடி வெயிலும் சேர்ந்து வீட்டில முடங்கி இருக்குற நம்மள ஒரு வழி பண்ணிடுது. ஆனாலும் மாம்பழ சீசன் ஆரம்பிச்சது மனசுக்கு கொஞ்சம் குளுமையா இருக்கும். கோடை என்றாலே மாம்பழ சீசன் தானே! வெயிலும் மாம்பழமும் சேர்ந்து கிடைக்கிற இந்த நேரத்துல மேங்கோ குல்ஃபி செஞ்சு உங்க பேமிலி மெம்பெர்ஸ் எல்லாரையும் அசத்துங்க!

கோடையை சமாளிக்க குளுகுளுன்னு மேங்கோ குல்ஃபி ரெசிபி!
வீட்டில் வைத்தே எப்படி மேங்கோ குல்ஃபி செய்றதுன்னு பாக்கலாம். வழக்கமான பால், பாதாம் பால், பசுவின் பால், ரப்ரி பாணி மற்றும் செறிவூட்டப்பட்ட பால் இத வச்சு நாம தயார் செய்யலாம். சிலர் இதுல ஆவியாக்கப்பட்ட பால் / கோயா அல்லது கிரீம் கூட சேர்க்கிறார்கள். பல சமையல்காரர்கள் அரிசி மாவு அல்லது சோளப்பொடியை குல்ஃபி கெட்டியா வாரத்துக்கு யூஸ் பண்றாங்க.

தேவையான பொருட்கள்:

மாம்பழம்
ஒரு சிட்டிகை உப்பு
பிரெஷ் கிரீம்
காய்ச்சிய பால்
பால் பொடி

செய்முறை:
மாம்பழத்தை நறுக்கி அதை ப்ளெண்டர் இல்லனா மிக்சில போட்டு நல்லா மைய அரைக்கணும். அப்புறம் சிறிது உப்பு சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
அரைச்ச கூழை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும், இத கொஞ்ச நேரத்துக்கு கலக்கணும். பிரெஷ் கிரீம், காய்ச்சிய பால் மற்றும் பால் பவுடர் சேர்த்து எல்லாவற்றையும் கலக்கவும். கலவையை குல்பி அச்சுல வச்சு அப்புறம் பிரிட்ஜ்ல வச்சுற வேண்டியதுதான். குளுகுளு மாங்கோ குல்ஃபி ரெடி. !