இன்று முதல் ஹால்மார்க் தங்க நகைகள், கலைபொருள்கள் மட்டுமே விற்பனை

 

இன்று முதல் ஹால்மார்க் தங்க நகைகள், கலைபொருள்கள் மட்டுமே விற்பனை

தங்க நகைகள் மற்றும் கலைபொருள்களுக்கு ஹால்மார்க் முத்திரை இடுவது கட்டாயம் என்பது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், இனி நகைக்கடைகளில் ஹால்மார்க் தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

கடைகளில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளுக்கான தரத்தை உறுதிப்படுத்த இந்திய தர நிர்ணயக் கழகத்தின் (பி.ஐ.எஸ்.) ஹால்மார்க் முத்திரை உதவுகிறது. இந்த முத்திரையை கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கத்தின் தரத்தை உறுதி செய்யலாம். ஹால்மார்க்கிங் தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று முன்பே உத்தரவிட்டது. ஆனால் தங்க நகை விற்பனையாளர்கள் இந்த நடைமுறைக்கு மாறாததால் இதற்கான காலக்கெடு பலமுறை நீடிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் (ஜூன் 16) ஹால்மார்க் தங்க நகைகள் மட்டுமே கட்டாயம் விற்பனை செய்யவேண்டும் விதிமுறை அமலுக்கு வருகிறது. நாடு முழுவதுமாக இது படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது.

இன்று முதல் ஹால்மார்க் தங்க நகைகள், கலைபொருள்கள் மட்டுமே விற்பனை
தங்க நகை

முதல் கட்டமாக ஏற்கனவே ஹால்மார்க்கிங் மையங்கள் உள்ள 256 மாவட்டங்களில் ஹால்மார்க் தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பது இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள தங்க நகைக் கடைக்காரர்கள் 14,18 மற்றும் 22 காரட் நகைகளை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 20, 23 மற்றும் 24 காரட் தங்கமும் ஹால்மார்க்கிங் செய்ய அனுமதிக்கப்படும்.

இன்று முதல் ஹால்மார்க் தங்க நகைகள், கலைபொருள்கள் மட்டுமே விற்பனை
தங்க நகை

அதேசமயம் நகை வியாபாரிகள் தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளுக்கு ஹால்மார்க்கிங் பெற செப்டம்பர் 1ம் தேதி வரை அரசாங்கம் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. எனவே எதிர்வரும் இரண்டு மாத இடைவெளியில் எந்தவொரு நகைக்கடைக்காரருக்கும் எதிராக எந்த அபராதமும் விதிக்கப்பட மாட்டாது. மேலும் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வரை விற்றுமுதல் கொண்ட நகைக்கடைக்காரர்களுக்கு கட்டாய ஹால்மார்க்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் தங்க நகைகள் மற்றும் கலைபொருள்களுக்கு ஹால்மார்க் முத்திரை இடுவது கட்டாயம் என்ற விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால் இனி நகைக்கடைகளில் ஹால்மார்க் தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் மற்றும் ஹால்மார்க் தங்க நகைகள் மட்டுமே கிடைக்கும்.