வேலை வாங்கி தருவதாக மோசடி: போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கைது!

 

வேலை வாங்கி தருவதாக மோசடி: போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கைது!

தற்போது திமுக கரூர் மாவட்டப் பொறுப்பாளராகவும் அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ள செந்தில்பாலாஜி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி செந்தில்பாலாஜி 81 பேரிடம் சுமார் ரூ.1.62 கோடி மோசடியில் ஈடுபட்டதாக அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் சூழலில் சென்னை ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் கணேசன் வீட்டில் முறைகேடு தொடர்பாக சோதனை நடைபெற்றது.

வேலை வாங்கி தருவதாக மோசடி: போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கைது!

இந்நிலையில் புகாரில் முகாந்திரம் இருப்பதாக தெரியவந்ததையடுத்து கணேசனை போலீசார் கைது செய்தனர். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கில் கணேசனுக்கும் தொடர்பு இருப்பதால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.