பெண் குழந்தை பிறந்ததால் மாமனாருக்கு கத்திக்குத்து ! மணமகனின் வெறிச்செயல் !!

பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் பெண் குழந்தை பிறந்ததால் அதிருப்தி அடைந் மருமகன் ஆத்திரத்தில் மாமனாரை கத்தியால் குத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மராத்தஹள்ளி பகுதியில் 52 வயது நபர் ஒருவர் தனது மருமகனால் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர் தனது மகள் ஒரு பெண் குழந்தையை பிரசவித்ததிலிருந்து அவரும் அவரது குடும்பத்தினரும் தங்கள் மருமகனால் துன்புறுத்தப்படுவதாகக் கூறினார்.

பொம்மனஹல்லி பகுதியில் வசித்து வரும் அன்னயப்பா. அவரது மருமகன் மஞ்சுநாதா. மஞ்சுநாதா கத்தியால் தாக்கியதால், மாமனாரின் முதுகில் மூன்று அங்குல ஆழத்தில் காயம் ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு, அன்னயப்பாவின் மகள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார், ஒரு ஆண் குழந்தையை விரும்பிய மஞ்சுநாதாவின் குடும்பத்தின் இது ஏமாற்றத்தை தந்தது. அப்போதிருந்து, மஞ்சுநாதா தனது மனைவியின் குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த பிரச்சனையை பேசி தீர்த்துவிட, திங்கள்கிழமை இரவு 9:30 மணியளவில், அன்னயப்பா தனது இரண்டு மகன்கள் மற்றும் அவரது மருமகனுடன் மஞ்சுநாதாவின் வீட்டிற்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென மஞ்சுநாதா ஒரு கத்தியைக் கொண்டு வந்து அன்னயப்பாவை முதுகில் குத்தினார். இதனால் மயங்கி விழுந்த அன்னயப்பா அவர் அருகிலுள்ள மருத்துவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதையடுத்த அன்னயப்பா மராத்தஹள்ளி போலீஸை அணுகி புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் மஞ்சுநாதா மீது வழக்கு பதிவு செய்தனர்.

Most Popular

மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

கேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...

“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...