“பக்கத்து வீட்டுக்காரன் இதயத்தை சாப்பிட்டு பேயை விரட்டினேன்” -மூட நம்பிக்கையால் நடந்த விபரீதம்.

“பக்கத்து வீட்டுக்காரன் இதயத்தை சாப்பிட்டு பேயை விரட்டினேன்” -மூட நம்பிக்கையால் நடந்த விபரீதம்.

தன் வீட்டிலிருந்து பேயை விரட்ட, தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரை கொன்று ,அவரின் இதயத்தை சமைத்து சாப்பிட்ட மூட நம்பிக்கை அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.

“பக்கத்து வீட்டுக்காரன் இதயத்தை சாப்பிட்டு பேயை விரட்டினேன்” -மூட நம்பிக்கையால் நடந்த விபரீதம்.

அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியில் 2017 ஆம் ஆண்டில் போதைப்பொருள்வைத்திருந்த குற்றங்களுக்காக ஆண்டர்சன் என்ற 42 வயதான நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு ஓக்லஹோமா பரோல் வாரியத்தின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் கெவின் ஸ்டிட் இந்த தண்டனையை 9 ஆண்டுகளாக குறைத்தார் . அதனால் ஆண்டர்சன் கடந்த மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டு தனது மாமா மற்றும் அத்தை ஆகியோருடன் தங்கியிருந்தார்.
இந்நிலையில் ஆண்டர்சன் பிப்ரவரி 9 ம் தேதி ஓக்லஹோமாவின் சிக்காஷாவில் உள்ள அவரது வீட்டின் பக்கத்து வீட்டிலிருந்த பிளாங்கன்ஷிப்பைக் கொலை செய்து அவரின் இதயத்தை சமைத்து சாப்பிட்டார் , அதன் பின்னர் அவரின் வீட்டிற்கு வீட்டிற்கு திரும்பிச் சென்று தனது மாமாவையும் அவரின் பேத்தியையும் கொன்றார்.
பிறகு ஆண்டர்சன் தனது அத்தை டெல்ஸி பைவையும் அவரது இரு கண்களிலும் குத்தினார். இருப்பினும், அந்தப் பெண் உயிர் தப்பினார்.இது பற்றி விசாரித்தபோது, ​​ஆண்டர்சன் பேய் நம்பிக்கை உடையவரென்றும் அதனால் பேய்களை துரத்த தனது பக்கத்து வீட்டு காரரின் இதயத்தை உருளைக்கிழங்குடன் சமைத்து, சாப்பிட்டு விட்டு, அதை தனது குடும்பத்தினருக்கும் வழங்கியுள்ளார் .பொலிசார் தகவலறிந்து இறந்தவரின் வீட்டிற்கு வந்து அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .பின்னர் ஆண்டர்சனை கைது செய்தார்கள் .செவ்வாயன்று, கிரேடி கவுண்டி நீதிமன்றம் ஆண்டர்சனுக்கு மரண தண்டனை விதிக்க உள்ளது..

“பக்கத்து வீட்டுக்காரன் இதயத்தை சாப்பிட்டு பேயை விரட்டினேன்” -மூட நம்பிக்கையால் நடந்த விபரீதம்.