“பகலில் வாத்தியார் ,இரவில் போலீஸ்” -போலி சர்டிபிகேட்டில் ரெட்டை வேஷம் போட்ட வாலிபர்

 

“பகலில் வாத்தியார் ,இரவில் போலீஸ்” -போலி சர்டிபிகேட்டில் ரெட்டை வேஷம் போட்ட வாலிபர்

நண்பருக்காக போலி சர்டிபிகேட்டில் வாத்தியார் மற்றும் போலீஸ் வேலை பார்த்த நபர் கைது செய்யப்பட்டார்

“பகலில் வாத்தியார் ,இரவில் போலீஸ்” -போலி சர்டிபிகேட்டில் ரெட்டை வேஷம் போட்ட வாலிபர்

உத்தரபிரதேசத்தில் உள்ள மொராதாபாத்தில் உள்ள தாகூர்த்வாரா பகுதியில் அணில் மற்றும் சுனில் என்ற இரு நண்பர்கள் இருந்தனர் .அவர்கள் இருவரும் 12ம் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்தனர் .இந்நிலையில் சுனிலுக்கு அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது .ஆனால் அவர் மேற்கொண்டு படிக்கவும் விரும்பியதால் அவர் தனக்கு கிடைத்த வேலையை தன்னுடைய பெயரில் போலியாக அவரின் நண்பர் அணிலை வேலை பார்க்க ஏற்பாடு செய்தார் .அதனால் சிலநாள் சுனிலாக ஆசிரியராகவும் ,சில நாள் அணிலாக போலீசாகவும் போலியாக ரெட்டை வேஷம் போட்டு வேலை பார்த்தார் .மேலும் 2017 ஆம் ஆண்டில் சுனிலின் சகோதரியை அவர் திருமணம் செய்து கொண்டார்.

 இதற்கிடையே  அணில் அங்குள்ள காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக போலி சான்றிதழ் மூலம் வேலை பார்த்து வந்ததை  பற்றி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .அதில் அவர் போடும் வேஷம் பற்றி கூறப்பட்டிருந்தது .அதனால் போலீசார் ரகசியமாக அவரை கண்காணித்து வந்தனர் .அப்போது அவருடைய சான்றிதழ் மற்றும் போட்டோக்களை சரி பார்த்தபோது அவர் சிக்கிக்கொண்டார் .அதனால் அவரை கடந்த வாரம் போலீசார் விசாரித்த போது ,அவர் பொலிஸிடமிருந்து தப்பியோடிவிட்டார் .அதனால் போலீசார் அந்த இருவர் மீதும் வழக்கு பதிந்து, அவர்களை   கைது செய்து  சிறைக்கு அனுப்பினார்கள்