சத்தம் போட்டு விளையாடிய மகள்கள் தந்தையால் அடித்துக்கொலை ! உத்தரபிரதேசத்தில் துயரம் !

உத்தரபிரதேசத்தில் சத்தம் போட்டு விளையாடிய ஐந்து வயது மற்றும் 2 வயது மகள்கள் கொல்லப்பட்டனர். இதனால் சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள் ஈத் பண்டிகை கொண்டாடவில்லை.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு சாண்ட் கபீர் நகரில் உள்ள பனெத்து கிராமத்தில் நடந்துள்ளது. குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 35 வயதான ஜைனுல் அப்தீன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி ஷாஹிதாவை விவாகரத்து செய்திருந்தார், ஆனால் அவரது மகள்கள் மோசிபா, 5, மற்றும் அல்சிபா, 2, அவருடன் வசித்து வந்தனர்.

“ஞாயிற்றுக்கிழமை இரவு, சிறுமிகள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சத்தம் போட்டு விளையாடியதால் தந்தை கோபம் அடைந்துள்ளார். இதனால் ஜைனுல் அருகில் கிடந்த ஒரு செங்கலை எடுத்து அவர்கள் இறக்கும் வரை சிறுமிகளின் தலையை அடித்து நொறுக்கினார். தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஜைனுலை கைது செய்தனர்.

Most Popular

உங்க ஓனரை சொல்லச் சொல்லுங்க… கராத்தே தியாகராஜனை சீண்டும் தி.மு.க எம்.பி

ரஜினிகாந்த் வருகிற நவம்பரில் கட்சி ஆரம்பிப்பார் என்று கராத்தே தியாகராஜன் கூறியதற்கு உங்கள் ஓனரை சொல்லச் சொல்லுங்கள் என்று தி.மு.க எம்.பி செந்தில் குமார் நக்கலாக பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தி.மு.க-வுக்கு...

ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் எங்களுக்குத் தொடர்பில்லை! – ஹரியானா முதல்வர் திட்டவட்டம்

ஹரியானாவில் உள்ள நட்சத்திர விடுதியில் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்கியுள்ள விவகாரத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று ஹரியானா முதல்வர் எம்.எல்.கட்டார் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி, தன்...

பெண்ணை வன்கொடுமை செய்த வாலிபன் -வழக்கு போட காவல்நிலையத்தில் கால்கடுக்க நிற்கும் தாய் -அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்..

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவின் மகளிர் காவல் நிலையத்தில் ஒரு 18 வயது பெண்ணும் அவரின் தாயும் பல நாட்களாக அந்த காவல் நிலையத்தின் வாசலில் காத்திருக்கிறார்கள் .என்ன காரணமென்றால் அந்த 18 வயது...

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியாத கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ உள் ஒதுக்கீடு எப்படி பயன் தரும்? – டி.டி.வி.தினகரன் கேள்வி

நீட் தேர்வுக்கு பயிற்சி கூட பெற முடியாத நிலையில் உள்ள கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு எப்படி பயன் தரும் என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக...
Open

ttn

Close