பன்றி வளர்ப்பதை தட்டி கேட்டவருக்கு அடி உதை – வழக்கில் 2 ஆண்டு சிறை!

பன்றி வளர்ப்பதை தட்டி கேட்டவருக்கு அடி உதை –  வழக்கில் 2 ஆண்டு சிறை!

பன்றி வளர்ப்பதை தட்டி கேட்டவரை அடித்து உதைத்த வழக்கில், தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

பன்றி வளர்ப்பதை தட்டி கேட்டவருக்கு அடி உதை –  வழக்கில் 2 ஆண்டு சிறை!

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புதுக்கொத்துகாட்டை சேர்ந்தவர் முருகேசன். இவரது வீட்டருகே அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம், அவரது மகன் சண்முகம் ஆகியோர் பன்றி வளர்த்து வந்துள்ளனர்.
குடியிருப்பு பகுதியில் பன்றி வளர்ப்பதை முருகேசன் தட்டிக்கேட்டதால், மாணிக்கமும், அவரது மகனும் சேர்ந்து முருகேசனையும் அவரது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி, மண்ணெண்ணை ஊற்றி எரிக்க முயன்றுள்ளனர்.

பன்றி வளர்ப்பதை தட்டி கேட்டவருக்கு அடி உதை –  வழக்கில் 2 ஆண்டு சிறை!

இது தொடர்பான வழக்கு, ஈரோடு மாவட்ட ஜே.எம் 2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 2019 ம் ஆண்டு நீதிபதி விஸ்வநாத் வழங்கிய தீர்ப்பில்,, முதன்மை குற்றவாளிகளுக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மூன்றாவது குற்றவாளி பூங்குமார் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒரு பிரிவில் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், மற்றொரு வழக்கிற்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் கடந்த 2019 ம் ஆண்டு விதித்தார்.

பன்றி வளர்ப்பதை தட்டி கேட்டவருக்கு அடி உதை –  வழக்கில் 2 ஆண்டு சிறை!

தண்டனை பெற்றவர்கள் கோபியில் உள்ள 3 வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன், இன்று ஜே.எம்.2 கோர்ட் விதித்த தீர்ப்பை உறுதி செய்வதாக தனது தீர்ப்பில் தெரிவித்தார்.