“குவாட்டர் அடிச்சா கொரானா ஓடிடும்” -போலீஸ் வேடமிட்டு போலி தகவல் பரப்பியவர் கைது

 

“குவாட்டர் அடிச்சா கொரானா ஓடிடும்” -போலீஸ் வேடமிட்டு போலி தகவல் பரப்பியவர்  கைது

ஒருவர் போலீஸ் வேடமிட்டு மது குடித்தால் கொரானாவை கொல்ல முடியுமென்று போலியான தகவலை சமூக ஊடகத்தில் பரப்பியது பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது

“குவாட்டர் அடிச்சா கொரானா ஓடிடும்” -போலீஸ் வேடமிட்டு போலி தகவல் பரப்பியவர்  கைது

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் குல்வந்த் சிங் என்பவர் ஒரு போலீஸ் வேடமிட்டு சமூக ஊடகத்தில் மது குடித்தால் கொரானா வைரஸை ஓழிக்கலாமென்று ஒரு போலியான தகவலை பரப்பியதால் கைது செய்யப்பட்டார் .
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவி கோடிக்கணக்கான பேரை பாதித்தும் ,லட்சக்கணக்கானோரை கொன்றும் வருகிறது .சீனாவில் தோன்றிய இந்த வைரஸை குணப்படுத்த இன்னும் மருந்துகள் கண்டு பிடிக்காத நிலையில் ,பல தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது .
ஆனால் நம்மூர் சித்த மருத்துவத்தில் சிலருக்கு குணமாகி வருகிறது .உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் சிலருக்கு தாமாகவே குணமாகி வருகிறது .எதிர்ப்பு சக்திகள் இல்லாதோருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் ,சிலருக்கு வெண்டிலேட்டர் உதவியுடனும் தீவிர சிகிச்சையளித்து குணப்படுத்தி வருகிறார்கள் .
இந்நிலையில் பஞ்சாப்பில் லூதியானாவில் ஒருவர் போலீஸ் வேடமிட்டு சமூக ஊடகத்தில் மது குடித்தால் கொரானா வைரஸ் நம்மை அணுகாது என்று ஒரு பொய்யான செய்தியை பரப்பி வருகிறார் .அந்த வீடியோ ஊடகத்தில் வைரலாகி வருகிறது .இந்த வீடியோ பற்றி போலீஸ் உயரதிகாரிகள் கேள்விப்பட்டு ,அந்த நபரை கைது செய்து விசாரித்த போது,தாம் நகைச்சுவைக்காக இப்படி ஒரு வீடியோவினை வெளியிட்டதாக கூறினார் .இது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள் .

“குவாட்டர் அடிச்சா கொரானா ஓடிடும்” -போலீஸ் வேடமிட்டு போலி தகவல் பரப்பியவர்  கைது