“ஆர். டி. ஓ. ஆபீஸ் பொண்ணுங்களை பத்தி ஆபாசமா சொல்லாதே ..” -ஊடகத்தால் உள்ளே போன நபர்.

“ஆர். டி. ஓ. ஆபீஸ் பொண்ணுங்களை பத்தி ஆபாசமா சொல்லாதே ..” -ஊடகத்தால் உள்ளே போன நபர்.

ஆர் டி ஓ அலுவலகத்தில் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத பெண்களை பற்றி ஆன்லைனில் தரக்குறைவாக கருத்துக்களை வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தார்கள்.

“ஆர். டி. ஓ. ஆபீஸ் பொண்ணுங்களை பத்தி ஆபாசமா சொல்லாதே ..” -ஊடகத்தால் உள்ளே போன நபர்.

மகாராஷ்டிராவின் தானே நகரில் உள்ள பிராந்திய போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ) சில ஆண்கள் அங்கு வேலை செய்யும் பெண்களிடம் சில அலுவல் விஷயமாக கோரிக்கைகளை வைத்துள்ளார்கள் .ஆனால் அங்கு வேலை சேயும் பெண்கள் அவர்களின் கோரிக்கைகளை சீனியாரிட்டி பிரகாரம்தான் வரவேண்டும் .குறுக்கு வழியில் சீக்கிரம் வேலையை முடித்து கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார்கள் .அதனால் அந்த ஆண்கள் இணைய தளத்தில் மேலதிகாரியிடம் ஆர். டி. ஐ. மனு மூலம் புகாரளித்தார்கள் .அது மட்டுமல்லாமல் அவர்கள் அங்கு வேலை செய்யும் பெண்களை பற்றி தரக்குறைவான கருத்துக்களை ஆன் லைனில் வெளியிட்டுள்ளார்கள் .
இதனால் அந்த ஆர்டிஓ அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சம்பந்தபட்ட நபர் மீது புகாரளிக்க முடிவெடுத்து விசாகா கமிட்டியை அணுகினர். .
அதனால் அந்த கமிட்டியில் ஆஜராக, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அந்த நபருக்கு பலமுறை சம்மன் அனுப்பினார்கள் .ஆனால் அந்த நபர்கள் அதை பொருட்படுத்தாமல் விசாகா கமிட்டியில் ஆஜராகவில்லை .அதனால் போலீசார் அந்த நபர்களுக்கு கைது வாரென்ட் பிறப்பித்து ஒருவரை கைது செய்தார்கள் .பின்னர் அவர் புதன் கிழமையன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார் .அதன் பிறகு அவர் ஜாமீனில் விடப்பட்டார் .போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

“ஆர். டி. ஓ. ஆபீஸ் பொண்ணுங்களை பத்தி ஆபாசமா சொல்லாதே ..” -ஊடகத்தால் உள்ளே போன நபர்.