“கொரானாவை விட க்வாட்டர் கொடுக்காம என்ன கொல்றாங்களே”-வைரஸ் வார்டுல நடந்த கொடுமை

 

“கொரானாவை விட க்வாட்டர் கொடுக்காம என்ன கொல்றாங்களே”-வைரஸ் வார்டுல நடந்த கொடுமை

இந்தியாவில் தற்கொலைகளைப் பொறுத்தவரை கேரளா ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2019 ஆம் ஆண்டில் இந்த மாநிலத்தில் மொத்தம் 8,556 தற்கொலைகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் 2018 ல் 8,237 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.இந்நிலையில் கொரானா வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நபர் சரக்கு கிடைக்காத விரக்தியில் , அந்த வார்டில் உலக தற்கொலை தடுப்பு தினமான நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது

“கொரானாவை விட க்வாட்டர் கொடுக்காம என்ன கொல்றாங்களே”-வைரஸ் வார்டுல நடந்த கொடுமை


கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கொரானா சிகிச்சை மையத்தில் 41 வயதான நபர் கொரானா சிகிச்சைக்காக வியாழக்கிழமையன்று அனுமதிக்கப்பட்டார் .அப்போது அவரின் மனைவி தன்னுடைய கணவர் ஒரு குடிகாரரென்றும் ,அவர் சரக்கு இல்லாமல் இருக்க முடியாதென்றும் கூறியுள்ளார் .ஆனால் அங்கிருந்த மருத்துவ பணியாளர்கள் இங்கு அதெல்லாம் கிடைக்காது ,கொஞ்சம் நாள் இங்கிருந்தால் அவர் சரியாகி விடுவாரென்று கூறி அனுமதித்துள்ளனர் .ஆனால அவரால் சரக்கடிக்காமல் இருக்கமுடியவில்லை ,பதட்டம் அதிகமானது ,கை கால்கள் நடுங்க ஆரம்பித்ததால் தன்னுடைய மனைவிக்கு போன் செய்து தன்னால் குடிக்காமல் இருக்க முடியவில்லையென்றும் ,இதனால் தான் தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கிறதென்றும் கூறியுள்ளார் .அவரின் மனைவியோ அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி போனை வைத்து விட்டார் .ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு அவர் அந்த வார்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .அப்போது அங்கு வந்த நர்ஸுகள் அவர் தூக்கில் தொங்குவதை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்ததும் போலீசார் விரைந்து வந்து அவரின் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்