நிச்சயமான பெண் -வலைவிரித்த வாலிபர்-அடுத்து இன்ஸ்டாகிராமில் நடந்த கொடுமைகள்

 

நிச்சயமான பெண் -வலைவிரித்த வாலிபர்-அடுத்து இன்ஸ்டாகிராமில் நடந்த கொடுமைகள்

இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்னின் போலியான கணக்குகளை துவங்கி ,அவரை பற்றி அவதூறு பரப்பிய வாலிபரை போலீசார் விசாரித்து வருகின்றனர்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தால்தேஜில் வசிக்கும் 23வயதான  பெண், எஸ்ஜி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிகிறார்.அந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் அக்கௌன்ட் இருக்கிறது .அதனால் அந்த பெண் அந்த கணக்கின் மூலம் பலரோடு அரட்டையடித்து வந்துள்ளார் .இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஒருவர் அந்த பெண்ணோடு இன்ஸ்டாக்ராமில் நட்பு கொண்டு பேசினார் .

நிச்சயமான பெண் -வலைவிரித்த வாலிபர்-அடுத்து இன்ஸ்டாகிராமில் நடந்த கொடுமைகள்

அதனால் அந்த பெண்ணும் அவரோடு நட்போடு பேசி வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்தது .அதனால் அந்த வாலிபருக்கு இது தெரிந்ததும் அந்த பெண்ணிடம் அந்த  நிச்சயதார்த்தத்தை கேன்சல் செய்து விட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார் .அதனால் அந்த பெண் அவரிடம் கோபம் கொண்டு அவரோடு பேசுவதை நிறுத்திக்கொண்டார் .அதனால் அந்த வாலிபர் அப்பெண்ணின் மீது கோபம் கொண்டு அவர் பெயரில் 12க்கும் மேற்பட்ட போலியான இன்ஸ்டாக்ராம் கணக்கினை துவங்கினார் .பின்னர் அந்த போலி கணக்கில் அந்த பெண்ணை பற்றி அவதூறான கருத்துக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டார் .இதனால் அந்த பெண்  அவர் மீது சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் அந்த வாலிபர் மீது வழக்கு பதிந்து அவரின் போலி கணக்குகளை ஆராய்ந்து வருகின்றனர் .இப்போது குற்றம் சாட்டப்பட்டவரை  கைது செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன.