“துணியோடிருக்கும் படத்தை துணியில்லாம மாத்திட்டானே” -பேஸ் புக்கில் பேசிய வாலிபரிடம் ஏமாந்த பெண்கள்

 

“துணியோடிருக்கும் படத்தை துணியில்லாம மாத்திட்டானே” -பேஸ் புக்கில் பேசிய வாலிபரிடம் ஏமாந்த பெண்கள்

சமுக ஊடகத்தில் பல பெண்களின் படத்தை எடுத்து ஆபாசமாக மாற்றி பணம் பறித்த வாலிபரை போலீஸ் கைது செய்தது

“துணியோடிருக்கும் படத்தை துணியில்லாம மாத்திட்டானே” -பேஸ் புக்கில் பேசிய வாலிபரிடம் ஏமாந்த பெண்கள்


குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் ஆனந்த் பகுதியில்29 வயதான ஜகதீஷ் சிங் என்பவர் வசித்து வந்தார் .இவர் சமூக ஊடகத்தில் பேஸ் புக்கில் ஒரு அக்கௌன்ட் ஆரம்பித்தார் .அப்போது அவர் பல பெண்களோடு அந்த அக்கௌண்டில் அரட்டையடிப்பார். அதன் பிறகு அவர் பலபெண்களுக்கு வீடியோ கால் மூலம் பேசுவார் .அப்போதும் அந்த பெண்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோவை ஸ்க்ரீன் ஷாட் மூலம் ரெகார்ட் செய்வார் .அதன் பிறகு அந்த போட்டோ மற்றும் வீடியோவை மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றுவார் .அதன் பிறகு அந்த பெண்களுக்கு அந்த போட்டோவை அனுப்பி ஆதி வைரலாக்குவதாக மிரட்டி அவர்களிடம் பணம் கேட்பார் .இப்படி அவரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் 50000 ரூபாய் அவருக்கு பணம் அனுப்பியுள்ளார் .இந்நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட ஒரு 19 வயது பெண் அவரை பற்றி போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் சைபர் க்ரைம் போலீசின் உதவியுடன் அவரை பற்றி தீர விசாரித்தனர் .அப்போது அவரின் சமூக ஊடக கணக்கை ஆராய்ந்த போது பல பெண்களின் நிர்வாண போட்டோக்கள் இருப்பதை பார்த்து அவரை போலீசார் கைது செய்தனர்
மேலும் அதில் சில சிறுமிகள் புகைப்படங்களும் இருப்பதால் , குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிறுவர் ஆபாச வழக்கை போலீசார் பதிவு செய்தார்கள் மேலும் அவருடைய மின்னணு சாதனங்கள் அனைத்தும் தடயவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள்