கொரானா பலரை கெடுத்தது -இவருக்கு கோடிகளை குவித்தது – 10 மாதத்தில் 10 கோடி எப்படி சம்பாதித்தார் தெரியுமா?

கொரானா பலரை கெடுத்தது -இவருக்கு கோடிகளை குவித்தது – 10 மாதத்தில் 10 கோடி எப்படி சம்பாதித்தார் தெரியுமா?

போலி சானிடைசர்களை விற்று 10 மாதத்தில் 10 கோடி ரூபாய் சம்பாதித்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்

கொரானா பலரை கெடுத்தது -இவருக்கு கோடிகளை குவித்தது – 10 மாதத்தில் 10 கோடி எப்படி சம்பாதித்தார் தெரியுமா?

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல்  அதிகரித்து வருவதால், சானிடைசர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. பலர் அதிக  லாபம் ஈட்டுவதற்காக டூப்ளிகேட் சானிடிசர்களை தயாரிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த  வியாழக்கிழமை குஜராத்தின் வதோதராவில் உள்ள இரண்டு இடத்திலிருந்து போலி சானிடைசர்  களை குற்றப்பிரிவு போலீஸ் மீட்டுள்ளது.

வதேராவின் வாஸ்னா சாலையில் உள்ள ஒரு கடையிலிருந்தும், ரவுபுரா பகுதியில் உள்ள மற்றொரு கடையிலிருந்தும் ரூ .10 லட்சம் மதிப்புள்ள போலி சானிடைசர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கடை உரிமையாளர்  நிதின் கோட்வானி தன் கடையில்  போலி சானிடைசர்களை விற்றதால் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார் .காவல்துறையினரின் கூற்றுப்படி, அவர் இந்த வியாபாரத்தின்  மூலம் 10 மாதங்களில் 10 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் .

அவரது உற்பத்தி பிரிவில் தயாரிக்கப்பட்ட சானிடைசர்களில் அதிக  அளவிலான மெத்தனால் இருந்தது. இது ஒரு அபாயகரமான இரசாயனமாகும் .இது மனித சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் போலி சானிடைசர்களை விற்ற வணிகர்களை போலீசார்  கண்காணித்து வருகின்றனர் .

இது பற்றி போலீசார் கூறுகையில்  மாருதி செம்  உரிமையாளர் அசோக் படேல்   தனக்கு மெத்தனால் வழங்கியதாகக் கோட்வானி கூறினார். பிறகு எங்கள் போலீஸ் குழு கோட்வானி கொடுத்த முகவரிக்கு  சென்றது , ஆனால் படேல் அங்கு காணப்படவில்லை. அவரையும் தேடி வருகிறோம் “என்றனர்

அவரது பண பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை அறிய அவரது வங்கி விவரங்களையும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்வதற்கும்  விசாரணைகள் நடந்து வருகின்றன.

கொரானா பலரை கெடுத்தது -இவருக்கு கோடிகளை குவித்தது – 10 மாதத்தில் 10 கோடி எப்படி சம்பாதித்தார் தெரியுமா?