முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாகனம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட நபர்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாகனம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட நபர்

சென்னை தலைமை செயலகத்தில் அதிக பாதுகாப்பு உள்ள முதலமைச்சர் நுழைவாயிலில் முதல்வர் வாகனம் முன்பு திடீரென ஒருவர் அமர்ந்து தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாகனம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட நபர்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாகனம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட நபர்

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நந்திவரத்தை சார்ந்தவர் அருள் தாஸ். இவர், நந்திவரத்தில் 450சதுர அடியில் வீட்டை கட்டியுள்ளார். கூடுதலாக அரசு புறம்போக்கு இடம் 150 சதுர அடியும் சேர்த்து கட்டுமான பணிகள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமித்த இடத்தில் உள்ள கட்டுமானத்தை மட்டும் இடிக்காமல் மொத்த வீட்டை இடித்துள்ளதாக அவர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காததை அடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

பின்னர், நீண்ட நேரமாக முதலமைச்சர் நுழைவாயில் பகுதியில் காத்திருந்த அவர் திடீரென 10ஆம் எண் நுழைவாயில் முதலமைச்சர் போர்ட்டிகோவில் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை காவல்துறையினர், குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.