‘115 நாட்கள் தொடர் பயணம்’.. மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த நபர்!

 

‘115 நாட்கள் தொடர் பயணம்’.. மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த நபர்!

காஞ்சிபுரம் மாவட்டம் வளத்தூர் பகுதியை சேர்ந்த பரந்தாமன்(47) என்பவர், முன்பையில் இருக்கும் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொரியாசிஸ் எனப்படும் தோல் நோய் இருக்கிறதாம். அதனால் இவர் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து தான் மருந்துகள் வாங்கிச் செல்வாராம். கொரோனா பரவுவதற்கு முன்னர் மருந்து வாங்கிக் கொண்ட இவர், மும்பையிலேயே சிக்கிக் இருந்துள்ளார். அதன் பிறகு கொரோனா பாதிப்பால் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்ல முடியாத வண்ணம் போக்குவரத்து முடக்கப்பட்டது.

‘115 நாட்கள் தொடர் பயணம்’.. மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த நபர்!

இதனால் மருந்து வாங்க முடியாமல் தவித்த இவர், நடந்தே சென்னைக்கு சென்று விடலாம் என முடிவெடுத்து பயணத்தை தொடங்கியுள்ளார். சுமார் 115 நாட்களாக 1,306 தூரம் வரையில் நடந்து வழியில் கிடைக்கும் இடத்தில் உண்டும் உறங்கியும் பயணத்தை தொடர்ந்து, கும்மிடிப்பூண்டியை பஸ் ஸ்டான்டை அடைந்துள்ளார். ஆதரவற்று அங்கு இருந்த பரந்தாமனை பார்த்து விசாரணை செய்த காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், அவர் மும்பையில் இருந்து வருவதை தெரிந்து கொண்டுள்ளார். அதன் பிறகு ஆம்புலன்ஸை வரவழைத்த அவர் பரந்தாமனை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகு அனுப்பி வைத்துள்ளார். கொரோனா பாதிப்பு மக்களின் வாழக்கையை பல விதமாக புரட்டி போட்டுள்ளது என்பதற்கு பரந்தாமன் ஒரு உதாரணம்.