Home இந்தியா "அழகு நிலையத்தில் ஆம்பிளைங்களே ஏன் தொடுறே?" -போனிலிலேயே விவாகரத்து கொடுத்த கணவன்

“அழகு நிலையத்தில் ஆம்பிளைங்களே ஏன் தொடுறே?” -போனிலிலேயே விவாகரத்து கொடுத்த கணவன்

"அழகு நிலையத்தில் ஆம்பிளைங்களே ஏன் தொடுறே?" -போனிலிலேயே விவாகரத்து கொடுத்த கணவன்

ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்த மனைவியை அவரின் கணவர் போனிலேயே விவாகரத்து கொடுத்துள்ளார் .

This picture has been used for representational purpose


மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகேயுள்ள அகமதுநகர் மாவட்டத்தில் 31வயதான ஒரு பெண் பியூட்டி பார்லர் படிப்பு படித்து விட்டு துபாயில் பணியாற்றினார் .அவரின் கணவரோடு கடந்த வருடம் மும்பைக்கு திரும்பிய அவர் அங்குள்ள அகமது நகரில் மூன்று வயது மகளோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண் அங்குள்ள அழகு நிலையத்தில் வேலைக்கு போனார் .அது அவரின் கணவருக்கு பிடிக்கவில்லை .அதனால் தன்னுடைய மனைவியிடம் இது பற்றி பல முறை எடுத்து சொன்னார் .ஆனால் அவரின் மனைவியோ குடும்ப செலவுக்கும் தன்னுடைய செலவுக்கும் பணம் போதவில்லை என்பதால் அந்த அழகு நிலைய வேலையை தொடர்ந்தார் .
இதனால் சந்தேகப்பட்ட அவரின் கணவர் அந்த பெண்ணை விவாகரத்து செய்ய முடிவு செய்தார் .
அதனால் அந்த பெண்ணுக்கு நவம்பர் 20ம் தேதியன்று போன் செய்தார் .அப்போது போனை எடுத்த அந்த பெண்ணிடம் இஸ்லாம் மத வழக்கப்படி மூன்று முறை தலாக் சொன்னார் .அப்படி தலாக் சொல்லிவிட்டு அந்த பெண்ணிடம் உறவை தொடர விரும்பவில்லையென்றும் ,மேலும் இனி வீட்டிற்குக்கு அவரை பார்க்க வரமாட்டேனென்றும் ,இனி அவரை விவாகரத்து செய்வதாகவும் கூறிவிட்டு போனை வைத்து விட்டார் .இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரின் கணவரை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றார் .ஆனால் அவர் போனை எடுக்கவில்லை .
அதனால் அந்த பெண் தனனுடைய கணவர் மீது போலீசில் புகாரளித்தார் .அதன் அடிப்படையில் அஹ்மத்நகரில் உள்ள பிங்கர் முகாம் காவல் நிலையத்தில் முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமை மீதான பாதுகாப்பு) சட்டம், 2019 இன் பிரிவுகளின் கீழ் சனிக்கிழமை அந்த கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.சர்ச்சைக்குரிய இஸ்லாமிய நடைமுறைப்படி உடனடி விவாகரத்து செய்வதற்கு உச்சநீதிமன்றம் இதற்கு முன்பு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

husband and wife
"அழகு நிலையத்தில் ஆம்பிளைங்களே ஏன் தொடுறே?" -போனிலிலேயே விவாகரத்து கொடுத்த கணவன்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய இயக்குநர் ஷங்கர்!

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால், அரசு பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. பேரிடரிலிருந்து மக்களை காப்பாற்ற உதவிக்கரம் நீட்டுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை...

ஆதாரங்கள் இருந்தால் யாராக இருந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கலாம் – உயர் நீதிமன்றம் அதிரடி!

சென்னை தண்டையார்பேட்டையில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அரசுத்தரப்பில்...

மக்களே உஷார்…! கொரோனா இரண்டாம் அலை “மிகவும் ஆபத்தானது” – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் பல லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது....

கிராமங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஐடியா கொடுத்த பிரதமர் மோடி!

கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆகியவை குறித்து சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்....
- Advertisment -
TopTamilNews