குன்றத்தூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது; கார், நகை பறிமுதல்

 

குன்றத்தூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது; கார், நகை பறிமுதல்

சென்னை

சென்னையில் காருக்கு மாத தவணை கட்டுவதற்காக திருட்டு தொழிலில் இறங்கிய நபரை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர். சென்னை குன்றத்தூர் அடுத்த கோவூர், தண்டலம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், குன்றத்தூர் சுற்றுவட்டார

குன்றத்தூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது; கார், நகை பறிமுதல்

பகுதிகளில் நடந்த தொடர் கொள்ளை சம்பவங்களால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. மேலும், அனைத்து கொள்ளை சம்பவங்களும் ஒரே மாதிரியாக இருந்ததால், கொள்ளையனை தீவிரமாக பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். கொள்ளை நடந்த பகுதியில் இருந்த 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து, பம்மல், கவுல்பஜாரை சேர்ந்த பாலாஜி(25), என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் குன்றத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது

குன்றத்தூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது; கார், நகை பறிமுதல்

தெரியவந்தது. மேலும், கார் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் பாலாஜி, காருக்கு தவணை செலுத்துவதற்காக கொள்ளையில் ஈடுபட துவங்கியதும், பின்னர் பணத்தேவை ஏற்படும் போதெல்லாம் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, இரவில் லுங்கி மற்றும் பனியன் அணிந்துசென்று கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், கொள்ளையடித்த பணத்தில் கார் தவணை கட்டி முடித்து, புதிய கார் வாங்கியதுடன், மனைவிக்கு பல்வேறு நகைகளும் எடுத்துக் கொடுத்துள்ளார். இதனையடுத்து, அவரிடம் இருந்து 65 பவுன் நகைகளும், 3 கிலோ வெள்ளி பொருட்கள் ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.