கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் விற்பனை செய்த மருந்து நிறுவன உரிமையாளர் கைது

 

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் விற்பனை செய்த மருந்து நிறுவன உரிமையாளர் கைது

தமிழக அரசு சார்பில் கொரோனா சிகிச்சை பெறுவோருக்கு ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட்டது. நேரு விளையாட்டரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த மருந்து கொரோனா சிகிச்சையிலிருந்து நீக்கப்பட்டதால் கடந்த 17 ஆம் தேதி முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனையை தமிழக அரசு நிறுத்தியது. இருப்பினும் இம்மருந்து மீதான நம்பிக்கையால் கள்ளசந்தையில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் விற்பனை செய்த மருந்து நிறுவன உரிமையாளர் கைது

இந்நிலையில் சென்னை வில்லிவாக்கத்தில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், இதுதொடர்பாக மருந்து நிறுவன உரிமையாளர் செங்குட்டுவனை கைது செய்தனர். அவரிடமிருந்து 30 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை செங்குட்டுவன் கள்ளசந்தையில் ரூ.18 ஆயிரத்துக்கு விற்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது.