ஜங்ஷனில் நின்ற பெண் போலீஸ் -டென்ஷனிலிருந்த குடிகாரர் -அடுத்து நடந்த சம்பவம்

 

ஜங்ஷனில் நின்ற பெண் போலீஸ் -டென்ஷனிலிருந்த குடிகாரர் -அடுத்து நடந்த சம்பவம்

பெண் போலீசை தாக்கிய ஒரு நபருக்கு, கோர்ட் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது

ஜங்ஷனில் நின்ற பெண் போலீஸ் -டென்ஷனிலிருந்த குடிகாரர் -அடுத்து நடந்த சம்பவம்

மும்பையின் புறநகர் கட்ட்கோபரில் ஒரு பெண் கான்ஸ்டபிள் ஒருவர் அங்கிருந்த ஒரு ஜங்ஷனில் டூட்டியிலிருந்தார் .அப்போது அங்கு  குடிபோதையில் வந்த சதீஷ் கவான்கர் என்ற 56 வயதான நபர் அந்த இடத்தில் குறுக்கே நின்று பலருக்கு இடையூறு செய்தார் .இதனால் அந்த பெண் போலீஸ் அந்த நபரை ஓரமாக போகுமாறு கூறினார் .உடனே டென்ஷனான அந்த நபர் அந்த பெண் போலீசை தாக்கினார் .அதனால் அந்த பெண் போலீசை அந்த பகுதியில் பாவ் பஜ்ஜி கடை வைத்திருந்த ஒருவர் வந்து காப்பற்றினார் .

அதன் பிறகு அந்த பகுதியிலிருந்த மற்ற இரு ஆண் போலீசார் அந்த சதீஷை வளைத்து பிடித்தனர் .அதன் பிறகு  அந்த நபரை அங்குள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் .

இந்த சம்பவம் 2019ம் ஆண்டு நடைபெற்றது ,அதன் பிறகு அவர் மீது வழக்கு பதிந்து கோர்ட்டில் இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்றது .அப்போது குற்றம் சாட்டப்பட்ட கெய்கர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

ஆனால் கோர்ட்டில் நடந்த விசாரணையில் பெண் காவலர் கூறிய குற்றசாட்டுகள்   சாட்சிகளுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இந்த சாட்சிகளில்  அங்கிருந்த வடா பாவ் விற்பனையாளர் மற்றும்  குற்றம் சாட்டப்பட்ட கெய்கரை  கைது செய்த காவல்துறை அதிகாரிகள் அடங்குவர்.இந்த  வழக்கின்  தீர்ப்பு  சமீபத்தில் வெளியானது . அந்த  தீர்ப்பில் அந்த நபருக்கு கோர்ட் 1000 ரூபாய் அபராதமும் ,ஒரு ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது  .