ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்கத்தில் மம்தா பேரணி!

ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்கத்தில் மம்தா பேரணி!

உ.பி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது.

ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்கத்தில் மம்தா பேரணி!

உத்திர மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த செப்.19ம் தேதி தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண்ணின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த, பெற்றோர்களின் அனுமதியின்றி போலீசார் அந்த பெண்ணின் உடலை எரித்தனர்.

ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்கத்தில் மம்தா பேரணி!

இச்சம்பவத்தை கண்டித்து நாடெங்கிலும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், இவை எதையும் மத்திய அரசு பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில், ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது. பிர்லா பிளானட்டேரியத்திலிருந்து காந்தி மூர்த்தி பகுதி வரையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்ணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.