மம்தா பானர்ஜியின் சகோதரர் பாபுன் பானர்ஜி கார் மீது லோடு வாகனம் மோதல்… விபத்தின் பின்னணியில் அரசியல்?

மம்தா பானர்ஜியின் சகோதரர் பாபுன் பானர்ஜி கார் மீது லோடு வாகனம் மோதல்… விபத்தின் பின்னணியில் அரசியல்?

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் பாபுன் பானர்ஜி சென்ற வாகனம் மீது லோடு வாகனம் மோதியது. இந்த விபத்தில் பாபுன் பானர்ஜிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்.

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் சகோதரர் பாபுன் பானர்ஜி. இவர் நேற்று மாலை கொல்கத்தாவின் சிங்ரிகட்டா அருகே பைபாஸ் சாலையில் ஒரு காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக பாபுன் பானர்ஜியின் காருக்கு பின்னால் வந்து கொண்டு இருந்தது ஒரு லோடு ஏற்றப்பட்ட சரக்கு வாகனம், பாபுன் பானர்ஜியின் வாகனத்தின் பின்னால் மோதியது.

மம்தா பானர்ஜியின் சகோதரர் பாபுன் பானர்ஜி கார் மீது லோடு வாகனம் மோதல்… விபத்தின் பின்னணியில் அரசியல்?
விபத்து

இந்த விபத்தில் பாபுன் பானர்ஜிக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சரக்கு வாகனத்தையும், அதன் டிரைவரையும் கைது செய்தனர். முதல்வரின் சகோதரர் கார் மீது வாகனம் மோதியதால் இதன் பின்னணியில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் எதுவும் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மம்தா பானர்ஜியின் சகோதரர் பாபுன் பானர்ஜி கார் மீது லோடு வாகனம் மோதல்… விபத்தின் பின்னணியில் அரசியல்?
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

ஆனால், விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனம் பிரேக் பெயிலர் காரணமாக பாபுன் பானர்ஜியின் கார் மீது மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக அந்த பகுதி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் நிர்மல் தத்தா கூறுகையில், இந்த விபத்து சுமார் இரவு 8.40 மணி நடந்தது. காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.