மத்திய படைகளுக்கு எதிராக வாக்காளர்களை தூண்டவில்லை… மம்தா பானர்ஜி விளக்கம்

 

மத்திய படைகளுக்கு எதிராக வாக்காளர்களை தூண்டவில்லை… மம்தா பானர்ஜி விளக்கம்

மத்திய படைகளுக்கு எதிராக வாக்காளர்களை தூண்டவில்லை என்று தேர்தல் ஆணையத்திடம் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் 8 கட்டமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிகளில் மத்திய படைகளையும் தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தியுள்ளது. ஆனால் மத்திய படைகள் மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த மார்ச் 28ம் தேதி மற்றும் ஏப்ரல் 7ம் தேதியன்றும் மத்திய படைகள் எதிராக கருத்து தெரிவித்து இருந்தார்.

மத்திய படைகளுக்கு எதிராக வாக்காளர்களை தூண்டவில்லை… மம்தா பானர்ஜி விளக்கம்
மத்திய படை வீரர்கள்

முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின்போது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக மத்திய படைகள் செயல்பட்டதாக மம்தா குற்றம் சாட்டினார். இதனையடுத்து மம்தா பானர்ஜிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய படைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தது தொடர்பாக ஏப்ரல் 10ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி கடந்த வெள்ளிக்கிழமை மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

மத்திய படைகளுக்கு எதிராக வாக்காளர்களை தூண்டவில்லை… மம்தா பானர்ஜி விளக்கம்
இந்திய தேர்தல் ஆணையம்

இதனையடுத்து மம்தா பானர்ஜி நேற்று தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் தெரிவித்து பதில் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், சி.ஏ.பி.எப். (மத்திய ஆயுத காவல் படை) எதிராக வாக்காளர்களை தூண்டுவதற்கு அல்லது ஆதிக்கம் செலுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. நான் தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என்பது தெளிவு என பதில் அளித்து இருந்தார்.