இந்த நாட்டுக்கே மோடியின் பெயர் வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.. மம்தா பானர்ஜி தாக்கு

 

இந்த நாட்டுக்கே மோடியின் பெயர் வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.. மம்தா பானர்ஜி தாக்கு

தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம், அகமதாபாத் மைதானத்துக்கு மோடி பெயர் வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்டு, ஒருநாள் இந்த நாட்டுக்கே மோடியின் பெயர் வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று பேரணி ஒன்றை நடத்தினார். அந்த பேரணியில் மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: எதிர்வரும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களை வென்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று உறுதியாக கூறுகிறேன்.

இந்த நாட்டுக்கே மோடியின் பெயர் வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.. மம்தா பானர்ஜி தாக்கு
முதல்வர் மம்தா பானர்ஜி

தேர்தல் நடைபெறும் 294 சட்டப்பேரவை தொகுதிகளிலும் எனக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேதான் போட்டி என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. தேர்தல் நடக்கும் காலங்களில் மட்டுமே மேற்கு வங்கத்துக்கு பா.ஜ.க. தலைவர்கள் வருகிறார்கள். அவர்கள் இங்கு வந்து பொய்களையும், வதந்திகளையும் பரப்புகிறார்கள். மேற்கு வங்க பெண்களின் பாதுகாப்பு குறித்து மோடி பேசுகிறார். மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, இரவில் அவர்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சொல்கிறார். ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பாதுகாப்பு நிலை என்ன?.

இந்த நாட்டுக்கே மோடியின் பெயர் வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.. மம்தா பானர்ஜி தாக்கு
நரேந்திர மோடி மைதானம்

பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கவனத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக மாதிரி மாநிலமாக இருக்கும் குஜராத்தை கவனிக்க வேண்டும். ஊடகங்களின் செய்திபடி, அங்கு தினமும் 2 கொலைகள் மற்றும் 4 பலாத்காரங்கள் நடைபெறுகிறது. அகமதாபாத் மைதானத்துக்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டபின் வழங்கப்படும் சான்றிதழில் மோடி படம் இருக்கிறது. ஒருநாள் இந்த நாட்டுக்கே மோடியின் பெயர் வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை