யாராலயும் செய்ய முடியல… துணிஞ்சி இறங்கிய மம்தா – பூனைக்கு மணி கட்டிவிட்ட மே.வங்க அரசு!

யாராலயும் செய்ய முடியல… துணிஞ்சி இறங்கிய மம்தா – பூனைக்கு மணி கட்டிவிட்ட மே.வங்க அரசு!

இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஜனநாயகத்தின் குரலாய் ஒலிக்கும் பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஸ்பைவேர் நிறுவனம் உருவாக்கிய சக்திவாய்ந்த பெகாசஸ் என்ற ஸ்பைவேர் உளவு பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் செல்போன் 2019ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் உளவு பார்க்கப்பட்டுள்ளது.

யாராலயும் செய்ய முடியல… துணிஞ்சி இறங்கிய மம்தா – பூனைக்கு மணி கட்டிவிட்ட மே.வங்க அரசு!

அதேபோல தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர், மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் செல்போன்கள் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இந்த ஒட்டு கேட்பினால் யாருக்கு சாதகம் என்ற கேள்வி எழுந்தால், அது மத்திய அரசை நோக்கி கைகாட்டுகிறது. பெகாசஸை உருவாக்கிய என்எஸ்ஓ நிறுவனத்துக்கு பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த அரசுகளே வாடிக்கையாளர்களாக இருப்பதால், இந்தியாவில் ஒட்டு கேட்டது மத்திய அரசு தான் என எதிர்க்கட்சியினர் அடித்துச் சொல்கிறார்கள்.

யாராலயும் செய்ய முடியல… துணிஞ்சி இறங்கிய மம்தா – பூனைக்கு மணி கட்டிவிட்ட மே.வங்க அரசு!

கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுதொடர்பாக கேள்விகள் எழுப்பும் எதிர்க்கட்சி எம்பிக்கள் உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆனால் இந்த விவாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கிறது. இச்சூழலில் நாட்டிலேயே முதன்முறையாக இவ்விவகாரம் குறித்து விசாரிக்க ஆணையம் ஒன்றை மேற்கு வங்க அரசு உருவாக்கியுள்ளது.

யாராலயும் செய்ய முடியல… துணிஞ்சி இறங்கிய மம்தா – பூனைக்கு மணி கட்டிவிட்ட மே.வங்க அரசு!

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரணை அமைக்க நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு உத்தரவிடும் என எதிர்பார்த்தோம். ஆனால் உத்தரவிடவில்லை. ஆகவே பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக மேற்கு வங்கம் அமைத்துள்ளது. இது சின்ன முயற்சிதான், இதைப் பார்த்து மற்ற மாநிலங்கள் விழித்துக் கொள்ளவே இந்த ஏற்பாடு” என்றார்.