புதுச்சேரி காங்கிரஸிலிருந்து காலியான அடுத்த விக்கெட்!

 

புதுச்சேரி காங்கிரஸிலிருந்து காலியான அடுத்த விக்கெட்!

தமிழகம் , புதுச்சேரியில் வருகின்ற மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் கட்சி தாவல், தேர்தல் பேரங்கள் என களைகட்டியுள்ளது. எப்படியாவது தென்னிந்தியாவில் தாமரையை மலர வைக்கும் நோக்கில் தீயாக வேலை செய்துவருகிறது பாஜக. ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்களை வளைத்துப் போட்டு காரியத்தைச் சாதித்தது. அதேபோல் தென்னிந்தியாவில் கால் பதிக்கும் நோக்கில் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிர முயற்சி செய்துவருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருக்கும் தலைவர்கள், பிரமுகர்கள், நிர்வாகிகளை இழுக்க பாஜக தீவிர முயற்சிசெய்து வருகிறது.

புதுச்சேரி காங்கிரஸிலிருந்து காலியான அடுத்த விக்கெட்!

பாஜகவின் வலையில் விழுந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் காங்கிரஸிலிருந்து விலகினர். இவர்களை தொடர்ந்து 3வதாக காங்கிரஸ் எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவை சபாநாயகருக்கு ராஜினாமா கடிதத்தை மல்லாடி கிருஷ்ணா ராவ் அனுப்பியுள்ளார். சுகாதார துறை அமைச்சராகவும் மல்லாடி கிருஷ்ணராவ் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.