“ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா?” – கமல் ஹாசன் கண்டனம்!

 

“ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா?” – கமல் ஹாசன் கண்டனம்!

குடியரசு தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிராம ஊராட்சிகளில் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்திஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராமசபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில், ஊராட்சியின் வரவு செலவுகள், திட்ட பணிகள், பயனாளிகள் தேர்வு செய்து, ஒப்புதல் பெறப்படும்.

“ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா?” – கமல் ஹாசன் கண்டனம்!

இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் அசாத்திய சூழல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் ஒரே நேரத்தில் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதன் காரணமாக மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராமசபை நடத்தப்படவில்லை.

இந்நிலையில் ஜனவரி 26 குடியரசு தினமான இன்றும் கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன், “கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கோவிட் காரணம் காட்டியிருக்கிறது. குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது?” என்று பதிவிட்டுள்ளார்.