நடிகர்கள் எம்.ஜி.ஆர், பாண்டியராஜனுக்கு மேக் அப் மேனாக இருந்த செல்வராஜ் காலமானார்!

 

நடிகர்கள் எம்.ஜி.ஆர், பாண்டியராஜனுக்கு மேக் அப் மேனாக இருந்த செல்வராஜ் காலமானார்!

நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலக்கட்டத்தில் தமிழ் சினிமா மிகவும் பெயர் பெற்றிருந்தது. அப்போது இருந்த நடிகர்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. காலத்தினாலும் அழியாத புகழ் பெற்ற அவர்களை திரைப்படங்கள் மூலமாக மக்கள் மனதில் பதித்ததில் ஒரு முக்கிய பங்கு மேக் அப் ஆர்டிஸ்ட்களுக்கும் உண்டு. அந்த வகையில் நடிகர்கள் எம்ஜிஆர்,ஆர்.பாண்டியராஜன் உள்ளிட்டோருக்கு மேக் அப் மேனாக இருந்தவர் செல்வராஜ்.

சமீப காலமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரது உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகிறது.