Home உலகம் மேக் இன் இந்தியா திட்டம்… இந்திய-அமெரிக்க வர்த்தக உறவை பாதிக்கிறதா?

மேக் இன் இந்தியா திட்டம்… இந்திய-அமெரிக்க வர்த்தக உறவை பாதிக்கிறதா?

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்கா இந்தியாவை வர்த்தக முன்னுரிமை நாடுகளின் பட்டியலில் (Generalized System of Preferences) வைத்திருந்தது. இந்தியாவுக்கு இது முக்கியவத்துவம் வாய்ந்த ஒன்று. ஏனெனில், இதன்மூலம் அதிகமான வரிச்சலுகை இந்தியாவிற்குக் கிடைக்கும். குறிப்பிட்ட சில பொருள்கள் வரியில்லாமலேயே அமெரிக்காவுக்குள் நுழைய செய்ய முடியும். ஆனால், இந்தியாவோ இதற்கென கைமாறு செய்யாமல், மாறாக இந்தியாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி, கட்டணமில்லாத வர்த்தக தடைகள் ஆகியவை அமெரிக்காவுக்குப் பெரும் தலைவலியாக அமைந்தது.

Center for American Progress U.S.-India Task Force - Center for American  Progress

இதனால் ஏற்பட்ட இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் போர் 2019ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி கடுமையாக முட்டிக்கொண்டது. இந்தியாவை வரிகளின் ராஜா என்று வர்ணித்த அப்போதைய அதிபர் டிரம்ப், வர்த்தக முன்னுரிமை நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்கியது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு வரிச்சலுகை மறுக்கப்பட்டது. இந்தியாவும் அமெரிக்க பொருட்களுக்கான வரிகளைத் தளர்த்தவில்லை. இதனால் இரு நாட்டு வர்த்தக உறவிலும் ஒருவித நெருக்கடி நிலை ஏற்பட்டது. இரு நாடுகளின் வர்த்தக உறவுகளுக்கிடையே இடைவெளி அதிகரித்தது.

America Will Vote to Heal This November. Will India Follow Suit?

தற்போது மேக் இன் இந்தியா, அதாவது சுயசார்பு இந்தியா திட்டம் அந்த இடைவெளியை மேலும் அதிகரிக்கும் என அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அறிக்கை கூறுகிறது. மிகப்பெரிய சவால்களையும் ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கிறது. 2021ஆம் ஆண்டுக்கான வர்த்தக கொள்கைகள் மற்றும் 2020ஆம் ஆண்டு அறிக்கையை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி முகமை (United States Trade Representative) சமர்பித்திருக்கிறது. 2020ஆம் ஆண்டு முழுவதும் அமெரிக்க ஏற்றுமதியாளர்கள் இந்திய சந்தையை எளிதில் அணுகும் வகையில் அங்கிருக்கும் வர்த்தக தடைகளை நீக்குவது குறித்து அமெரிக்க தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

New America Announces 2019 Class of India-United States Public Interest  Technology Fellows

அந்த அறிக்கையில், “மிகப்பெரிய சந்தை, பொருளாதார வளர்ச்சி, வளர்ச்சியை நோக்கிய மேம்பாடு என அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு இந்தியா இன்றியமையாத ஒரு சந்தை நாடாகத் திகழ்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இந்தியாவில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரே மாதிரியான வர்த்தக கட்டுப்பாடுகள் இருப்பது அவர்களுக்கு சுமையாக இருக்கிறது. இது இருதரப்பு வளர்ச்சியையும் தடுக்கிறது. தற்போது இறக்குமதிக்கு மாற்றாக இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சுயசார்பு இந்தியா என்ற பிரச்சாரம் இரு தரப்பு வர்த்தக உறவால் ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது.

Strategic Autonomy India's Best Option As US Offers To Help Ease Indo-China  Conflict

இதற்குக் காரணம் 2019ஆம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவின் முன்னுரிமை நாடுகள் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டதே. இதன்பிறகே இந்தியாவும் அமெரிக்காவும் சுமுகமான முடிவு எட்டுவதற்காகப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக இறங்கின. இதில் இந்தியாவிலிருக்கும் வரியில்லா வர்த்தக தடைப் பிரச்சினைகளைக் களைவது, அதிகப்படியாக விதிக்கப்படும் வரிகளைக் குறைப்பது உள்ளிட்டவை அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

America Shouldn't Miss Its Chance With India – Foreign Policy

அதேபோல இருதரப்பு வர்த்தக உறவை முழுமையாகப் பாதிக்கும் ஏராளமான விஷயங்கள் குறித்து 2020ஆம் ஆண்டு முழுவதும் அமெரிக்கா இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் அறிவுசார் சொத்து, பாதுகாப்பு, அமலாக்கம் உள்ளிட்டவை அடங்கும். இ-காமர்ஸ், டிஜிட்டல் வர்த்தகத்தைப் பாதிக்கும் கொள்கை உருவாக்கல், விவசாய மற்றும் விவசாயமற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றைச் சந்தைப்படுத்துதலும் அதில் அடங்கும் என்று அறிக்கை கூறுகிறது.

'Make In India' Epitomises Challenges In Trade With India : US Report

இந்த அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டில் மொத்த இறக்குமதி சேவையில் 62.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகம் செய்து முதலிடத்தில் பிரிட்டன் இருக்கிறது. கனடா, ஜப்பானுக்குப் பிறகு 29.7 பில்லியன் டாலர்களுஅட்ன் இந்தியா ஆறாவது இடத்தில் இருக்கிறது.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews